தமிழகம் முழுவதும் நாளை டெட் தேர்வு-2 தொடக்கம்: 3.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி  நியமனம் பெற தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு, தற்போது இரண்டாம் தாளுக்கான தேதி அறிவித்தது. இந்த தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படுகிறது. நாளை தொடங்கி 12ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணை  ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெ ளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால்டிக்கெட்டுகள் கடந்த மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் மாவட்ட வாரியாக தேர்வு மையங்கள், தேர்வு குறித்த விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நபர்கள் தேர்வுக்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான www.trb.tn.nic.in ல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தகுதித் தேர்வு தாள் இரண்டு தொடங்க உள்ளது. இந்த தேர்வுகள் முதற்கட்டமாக 3ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரையும் இரண்டாம் கட்டமாக 10ம் தேதி முதல் 14ம் தேதி வரையும் நடக்கும். ஒவ்வொரு நாளும் காலை மதியம் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: