நெல்லையில் 18 யூனிட் பாறைகள் திருடியவர் மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு ரூ.25,000 செலுத்தி ஜாமின் பெறலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை, வள்ளியூரில் 18 யூனிட் பாறைகள் திருடியவர் மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு ரூ.25,000 செலுத்தி ஜாமின் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிம அறக்கட்டளைக்கு வங்கி மூலம் ரூ.25,000 செலுத்திய ரசீது கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாறைகளை திருடியதாக ஜனவரி 7ம் தேதி வள்ளியூர் போலீசால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முத்துராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான முத்துராஜாவின் ஜாமின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா ஆணையிட்டுள்ளார்.

Related Stories: