இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்

மும்பை: நடிகை இலியானா, மருத்துவமனையில் இருந்தவாறே, அவரது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவர் என்ன நோய்க்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்ற குழப்பம் நீடிக்கிறது. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இலியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்ஃபி படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு மூன்று பேக் IV என்ற திரவ ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் மிக்க நன்றி. சரியான நேரத்தில் எனக்கு நல்ல மருத்துவ உதவி கிடைத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரது பதவில் தனக்கு எந்த விதமான நோய் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து குறிப்பிடவில்லை. பொதுவாக IV திரவ ஊசியானது, நீரழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குள் செலுத்தப்படும் ஊசி வகையாகும். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், உடற்பயிற்சி அல்லது உடல் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படும் எல்லா வயதினருக்கும் இந்த வகை ஊசி செலுத்தப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே நடிகைகள் சமந்தா, மம்தா மோகன்தாஸ், பியா, பூனம் கவுர் உள்ளிட்டோர் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலியானாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Related Stories: