சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: வழித்தடங்கள் 3 மற்றும் 5ல் நடைபெறவுள்ள பணிகளுக்கு ரூ.404.45 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் நடைபெறவுள்ள பணிகளுக்கு ரூ.404.45 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 (சோழிங்கநல்லூரிலிருந்து சிப்காட்-2 வரை) மற்றும் 5-ல் (சிஎம்பிடியிலிருந்து சோழிங்கநல்லூர் வரை) மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் அமைப்பதற்கான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.404.45 கோடி மதிப்பில் லின்க்சன் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு ஒப்பந்தமானது. மின்சார அமைப்பின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான மின்சாரம், அத்துடன் வழங்குவதை திறமையான மின் அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் 37 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்களில் மின்சாரம் மற்றும் மேல்நிலை உபகரணங்களின் செயல்பாடுகளுக்கான ஒப்பந்தத்தில், வழித்தடம் 3-60 (சோழிங்கநல்லூர் முதல் சிப்காட்-2 வரை) 9.38 கி.மீ நீளத்திற்கு 9 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மற்றும் வழித்தடம் 5-60 (சி.எம்.பி.டி. முதல் சோழிங்கநல்லூர் வரை) 29.05 கி.மீ நீளத்திற்கு 28 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் திருவாளர் லின்க்சன் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு 404.45 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் விற்பனை இயக்குநர் யாசிர் ஹமீத் ஷா, லின்க்சன் இந்தியா பிரைவேட் நிறுவனம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சீனிவாசன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லின்க்சன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.

Related Stories: