தீ விபத்தில் பெண் பலி

தண்டையார்பேட்டை: ராயபுரம் ஜிஎம் பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் (35). இவர், மெரினா கடற்கரையில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சஹானா (32). இவர்கள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, அலமாரியில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன் கீழே விழுந்து, சஹானா புடவையில் மண்ணெண்ணெய் பட்டது. அப்போது, அருகில் கொளுத்தி வைத்திருந்த கொசு வர்த்தி மீது புடவை உரசி தீப்பிடித்ததால், அவர் அலறி துடித்தார். இதனைகண்ட சஹானாவின் கணவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அனைத்து, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீ காயம் அதிகமாக இருந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, முகம், வலது கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீ காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்த தகவலின்பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: