நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். மகனுக்கு அழைப்பு: பழனிசாமி கோரிக்கை நிராகரிப்பு?

சென்னை: நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். மகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி அதிமுக மக்களவை குழு தலைவர் என்று குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கோரிக்கை நிராகரிப்பு?:

அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என பழனிசாமி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். பழனிசாமி கடிதம் எழுதி 6 மாதங்கள் ஆகியும் அதிமுக மக்களவை குழு தலைவர் என குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது உறுதியானது.

அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு:

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ரவீந்திரநாத் பங்கேற்றுள்ளார். அதிமுக மக்களவை குழு தலைவர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. பங்கேற்றிருக்கிறார். அதிமுக மாநிலங்களவை குழு தலைவர் என்ற அடிப்படையில் பழனிசாமி ஆதரவு எம்.பி. தம்பிதுரையும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: