அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 3-வது நாளாக கடும் வீழ்ச்சி

மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 3-வது நாளாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.402.80 காசுகள் சரிந்து ரூ.1,611.40-ஆக வர்த்தகமாகி வருகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை ரூ.586.90 சரிந்து ரூ.2,347.65-ஆக வர்த்தகமாகி வருகிறது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.270 குறைந்து ரூ.1215-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது பங்கு விலை 17.4 சதவீதம் சரிந்துள்ளது.

Related Stories: