நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரது உடல் நலம் தொடர்பாக கேட்டறிந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்த்து நலம் விசாரித்தார். அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும், இயல்புநிலைக்கு திரும்பி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் உடனிருந்தார்.

Related Stories: