தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த யானை கூட்டத்திலிருந்து பிரிந்த 2 யானைகள், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிக்கிலி வனப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலைவில் உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியில் நன்கு விளைந்துள்ள கரும்புகளை சாப்பிட்டு, ருசி கண்ட யானைகள், அங்கேயே முகாமிட்டவாறு பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வனத்துறை ஏஎஸ்பி வின்சென்ட் கூறுகையில், ‘விரைவில் மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: