கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும பணி நேற்று துவங்கியது. கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இங்கு  பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான் வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 2 நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். இதேபோல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

Related Stories: