அரசு பேருந்து மோதி கோயில் குதிரை உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி பச்சைவாழி அம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கொணலவாடி கிராமம். இந்த கிராமத்தில் பழமையான பச்சைவாழி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர் ஒருவர் கடந்த வருடம் குதிரை ஒன்று நேர்த்திக் கடனாக வழங்கினார்.

இந்த குதிரை கோயில் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த வழியாக சென்ற அரசு கிராமப்புற பேருந்து குதிரை மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட குதிரை அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திரண்டதால் கொணலவாடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பச்சைவாழி அம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை அரசு பேருந்து மோதி உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர்.

Related Stories: