2 நாய்களுக்கு மேல் வீட்டில் வளர்க்க தடை

திருவனந்தபுரம்: ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க திருவனந்தபுரம் மாநகராட்சி தடை விதித்துள்ளது. திருவனந்தபுரத்தில் பக்கத்து வீடுகளில் வளர்க்கும் நாய்களால் தங்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுவதாக மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நாய் வளர்ப்பதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர  தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி ஒரு வீட்டில் அதிகபட்சமாக 2 நாய்களை மட்டுமே வளர்க்க முடியும். கூடுதல் நாய்களை வளர்க்க வேண்டும் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக லைசென்ஸ் வாங்கி அதற்கான கட்டணமும் கட்ட வேண்டும். வருடத்திற்கு ரூ.1000, ரூ.750, ரூ.500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்த உடன் விரைவில் இந்த உத்தரவு அமலுக்கு வரும்.

Related Stories: