முதல் முறையாக `பழங்குடி பொக்கிஷங்கள்’ நடமாடும் வாகனத்தில் விற்பனை

நெல்லை:  நெல்லை  மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் காணி  பழங்குடியினர் பொருட்களை வெளி இடங்களுக்கு கொண்டு சென்று விற்கவும்,  நெல்லை மாவட்ட நிர்வாகமும், போஸ் நிறுவனமும் இணைந்து சுமார் ரூ.17 லட்சம்  மதிப்பில் நடமாடும் விற்பனை வாகனத்தை புதிய முறையில் வடிவமைத்து இலவசமாக  வழங்கி உள்ளனர். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவின்போது    `பழங்குடி பொக்கிஷங்கள்’ என்ற நடமாடும் விளைபொருள் விற்பனை வாகனத்தை  கலெக்டர் விஷ்ணு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வனப்பகுதியில் கிடைக்கும் தேன், மிளகு, காந்தாரி மிளகாய், நெல்லி, போன்ற  64 விளை பொருட்கள் மற்றும் இந்த விளை பொருட்களில் இருந்து கூடுதலாக  தயாரிக்கும் பொருட்கள் என 110 பொருட்கள் இந்த நடமாடும் வாகனம் மூலம்  விற்பனை செய்யப்படுகிறது. இது, தமிழ்நாட்டில் முதன் முறையாக நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: