ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: ஒவ்வொரு தமிழரும் நினைவு கூரக்கூடிய நாள்தான் இந்த வீரவணக்க நாள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர்; ஒவ்வொரு தமிழரும் நினைவு கூரக்கூடிய நாள்தான் இந்த வீரவணக்க நாள். தமிழுக்காக உயிர்நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள். தங்களின் தேக்கு மர தேகத்தை தீயால் எரித்துக் கொண்டவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள்.

வீழ்ச்சியுற்று கிடந்த தமிழ்நாடு பகுத்தறிவு கருத்தால் உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை நினைவுகூரும் நாள். தமிழ் காக்க தங்கள் உயிரை விலையாய் கொடுத்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது, தமிழினம் தாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். மொழிக்காக தங்களது தேக்கு மர தேகத்தை தீக்கு தின்னக் கொடுத்த தீரர்கள்தான் திமுக தொண்டர்கள். இருமொழிக்கொள்கைக்கு காரணமான மொழிப்போர் தியாகிகளை 50 போர் ஆண்டுகள் கடந்தும் நினைவுகூர்கிறோம்.

உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம்வர இருமொழிக் கொள்கையே காரணம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக. திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளது பாஜக. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.

Related Stories: