நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது. மரபுப்படி அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். குடியரசு தலைவர் உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

பிப்ரவரி 1ம் தேதி 2023 -2024 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் அமர்வு வரும் 31ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

பட்ஜெட் கூட்ட தொடரை ஆக்கபூர்வமாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள ஒன்றிய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 30ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்புவிடுத்துள்ளார்.

Related Stories: