ஆளுநர் விருந்தினர் மீது நடவடிக்கை?: சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் தொடங்கியது

சென்னை: சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் தொடங்கியது. ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையின்போது அவரது விருந்தினர் செல்போனில் படம் பிடித்ததில் உரிமை மீறல் என புகார் எழுந்தது.

ஆளுநர் விருந்தினரின் உரிமை மீறல் தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டத்தில் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், நல்லதம்பி, ஈஸ்வரப்பா, பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் தொடர்பான,  அவை உரிமை மீறல் கூட்டம் துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில்  தலைமை செயலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையின்போது, ஆளுநருடன் வந்த விருந்தினர் செல்போன் மூலம் படம் பிடித்தார் என உரிமை மீறல் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் டி. ஆர். பி. ராஜா சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர் ஒருவர் பேரவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் பதிவு செய்துகொண்டிருந்தார். பேரவை விதிகளின்படி இது தவறானது எனவும், அவை உரிமை மீறல் குழுவினருக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் டி. ஆர். பி. ராஜா சட்டப்பேரவையில் வகோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால்   

இதை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கு அவை உரிமை குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் தற்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் அவை உரிமை மீறல் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Related Stories: