ஆர்.எஸ்.எஸ். முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம்

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பை  சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தியுள்ளது. இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்திருந்தது இந்நிலையில் மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

ஒருபுறம் அமைதி பூங்கா என கூறிவிட்டு மறுபுறம் சட்டமொழுங்கு பிரச்சனை என காவல்துறை அனுமதி மாறுகிறது என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் குறிப்பிட்டிருக்கிறது.மற்றம் அமைப்புகளின் போராட்டங்களுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்குள்ள என்று காவல்துறை தரப்பில் விவாகம் முன்வைக்கப்படிருந்தது இந்நிலையில் மேல்முறையிட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.  

கடந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்தது. ஆனால் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து, ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி வழங்ககோரி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டின் 51 இடங்களில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக அந்த ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்தது.தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ள 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில்அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளித்தது.

Related Stories: