இந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தையும் இந்திய மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது, நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு

வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 பாமக நிறுவனர் ராமதாஸ்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தில் மீண்டும்  ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

Related Stories: