ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 26-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, இன்று முதல் 26-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.02.2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளாக போட்டியிட விருப்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைகழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாளிகையில் 23.1.2023 திங்கட்கிழமை முதல் 26.01.2023 வியாழக்கிழமை வரை வழங்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை விருப்பமனு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மா.செ.மனோகரன், ஜெகதீசன் ஆகியோர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் வரும் 31-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்பமனு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளியாகப் பூர்த்தி செய்து உடனடியா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories: