அண்ணாமலையார் கோயிலில் சிவ தாண்டவம் ஆடிய துருக்கி நாட்டு பெண்: பக்தர்கள் வியப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், துருக்கி நாட்டு பெண் சிவ தாண்டவம் ஆடியதை பக்தர்கள் வியந்து ரசித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து  தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு சமீப நாட்களாக வெளிநாட்டு பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று துருக்கி நாட்டை பெண் பக்தர் ஒருவர், தரிசனம் முடிந்துவிட்டு வெளியே வந்ததும் பக்திப்பெருக்கால் திடீரென 3ம் பிரகாரத்தில் சிவ தாண்டவம் ஆட தொடங்கினார். அபிநயத்துடன் வெளிநாட்டு பெண் நாட்டியமாடுவதை அங்கிருந்த பக்தர்கள் வெகுவாக வியந்து பார்த்தனர்.

Related Stories: