சரிய தொடங்கியது நகை விலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,320க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது விலை குறைந்தது நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் புத்தாண்டு பிறந்ததில் இருந்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.

கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சூழ்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,320 க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

Related Stories: