விமர்சித்து பேசிய பேச்சாளர் மீது ஆளுநரின் செயலாளர் அவதூறு வழக்கு: செஷன்ஸ் கோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை:  தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசினார். அதனால், அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.  இந்தநிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் செயலாளர் சார்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Stories: