கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசித்து வேட்பாளரை அறிவிப்போம்: அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா. தலைவர் வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவின் காரணமாக நேற்று, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடக்கம் எனவும், பிப்ரவரி  27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளை களமிறக்கின. அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா)  சார்பில் யுவராஜா என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடுமா அல்லது மீண்டும் தமாகா கட்சிக்கு வாய்ப்பளிக்க படுமா என்கிற நிலையில்,  இன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலோசனை முடிந்த பின்னர் ஜி.கே.வாசன், அதிமுக நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஜி.கே.வாசன் பேசியதாவது;  தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல், வெற்றி வியூகம் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் தேர்தல் குறித்து பேசினேன். அதிமுக-தமாகா-பாஜக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: