சென்னை: சென்னை, வள்ளூவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று (18.01.2023) ஆய்வு செய்தார்.
சென்னையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வள்ளூவர் கோட்டம் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞரால் 1975-76ம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வளாகத்தில் திருக்குறள் ஆய்வரங்கம், நூலகம், திருக்குறள் மணிமாடம், கல்சிற்ப தேர் ஆகியவை அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலைமைச்சர் அறிவுரையின்படி, இவ்வளாகத்தில் பின்வரும் புனரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.
· மேற்கூரை மற்றும் பழுதடைந்த கான்கீரிட் தூண்கள் புனரமைத்தல்· குறள்மணி மாடம் புதுப்பித்தல்· சுமார் 1490 நபர்கள் அமரக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட நவீன உள்ளரங்கம் அமைத்தல்· நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட திருக்குறள் ஆய்வு மையம் மற்றும் நூலகம் அமைத்தல்· அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள் புதுப்பித்தல்· நவீன உணவுக் கூடம்,· நகரும் படிக்கட்டுகள் (Escalator) மற்றும் மின் தூக்கி (Hydraulic Lift) ஆகியவை பொருத்துதல்.மேற்கண்ட வளாகத்தில் நடைபெறவுள்ள பணிகள் குறித்து, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், இ.ஆ.ப., ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.