வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பெய்து வரும் புயல் மழை அந்த மாகாணத்தையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவின் தாக்கம் முடிவதற்குள் புயல் மழையும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பல மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர் மழை, அதீத ஈரப்பதத்தில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.