பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிப்பு தீவிரம்

அரூர் : தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை, அடுத்த வாரம் கொண்டாடப்படுவதையொட்டி, அரூர் பகுதியில் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரூர் அடுத்த கொங்கவேம்பு பகுதியில் பானை தயாரிக்கும் தொழிலாளர்கள், இரவு பகலாக பானை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 41 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் கொங்கவேம்புவை சேர்ந்த பரந்தாமன், ராமராஜ் கூறியதாவது:

பல வருடங்களாக இந்த தொழில் செய்து வந்தாலும், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பானை விலை மிகவும் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களான மணல், விறகு, வைக்கோல், கரும்பு சோகை, செம்மண், களிமண் இவற்றின் விலை உயர்ந்துள்ளதால், பானையின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அளவை பொருத்து ₹250 முதல் ₹275க்கு விற்பனை செய்யப்பட்ட பானை, இந்த ஆண்டு ₹300 முதல் ₹350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மழை பெய்ததால், ஏரியில் களிமண் தண்ணீர் அதில் அளவில் உள்ளதால், மழையால் வேலை ெசய்யமுடியவில்லை. மூலப்பொருட்களின் விலை 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதால், பானையின் விலையும் உயர்ந்துள்ளது. பானை தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்களை சலுகை விலையில் கிடைக்க செய்தால், தொழில் செய்ய ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: