உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு

ஜோஷிமத்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட ஒன்றிய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன. ஜோஷிமத் நகர் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு புதைவு மண்டலமக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. ஜோஷிமத்தில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 60 குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

வேறு இடங்களுக்கு குடிபெயர விரும்புவோருக்கு ரூ.4000 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு காரணமாக சுமார் 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலநிலை, உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் சரிந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 60 குடும்பங்கள் வெளியேறின. வீடுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி 29 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய சாலை, கட்டிடங்களில் நாளுக்கு நாள் விரிசல்கள் அதிகமானதால் விஷ்ணுகாட் நீர்மின் நிலைய திட்டப் பணிகள், சார் தாம் நெடுஞ்சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டன. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விடுதி, ஓட்டல், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: