மார்கழி திருவாதிரை தினத்தையொட்டி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

சென்னை: தமிழகம் முழுவதும் மார்கழி திருவாதிரை தினத்தையொட்டி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனார். 27 நட்சத்திரங்களில் திரு என்று அந்தஸ்தை பெற்றது திருவோணம் மற்றும் திருவாகதிரை ஆகிய இரண்டும் தான். இதில் திருவோணம் விஷ்ணுவுக்கு உரியதாக போற்றப்படுகிறது. அதே போல் திருவாதிரை சிவ பெருமானுக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மற்ற மாதங்களில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை விட மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை தினத்தில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் செய்து ஆருத்ரா தரிசன உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சிவ பெருமானுக்கு நடத்தப்படும் உயர்வான ஆறுவகை அபிஷேகங்களில் ஒன்று ஆருத்ரா தரிசன திருமஞ்சனமாகும். மார்கழி திருவாதிரை தினமான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் உள்ள நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே அனைத்து சிவ பொருமான் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் உற்சவ திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதன் ஒரு பகுதியாக சென்னை, மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடராஜ மூர்த்திக்கு சந்தனம், பால், பன்னீர், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், திருவாசகம் முழங்க சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளிலும் நடராஜர் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Related Stories: