திருவையாறு பகுதியில் இயற்கை முறை சாகுபடி வாழை அறுவடை பணி தீவிரம்: விலை அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு உள்ளிட்ட கிராமங்களில் இயற்கை முறையில் பயிரிட்ட வாழை அமோக விளைச்சல் ஆகி விலையும் கூடுதலாக கிடைத்துள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் காவிரி கரையோர கிராமங்களான திருவையாறு, ஆச்சனூர், வடுகக்குடி, சாத்தனூர், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழை தார் வெட்டும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வாழை தார்கள் இந்தாண்டு அமோக விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலைபோன வாழை தார்கள் இந்த ஆண்டு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை போய் உள்ளது. வியாபாரிகள் முன் கூட்டியே முன்பணம் செலுத்தி விலை பேசி முடித்துள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: