சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்த கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படிப்பட்ட வியூகம் அமைத்து தேர்தலை சந்திப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேசநலனுக்கு பாதிப்பு ஏற்படும்போது, கட்சியின் எல்லைகளை கடந்து களத்தில் நிற்பவர் என்பதை மீண்டும் நிரூபிப்பதாக இருந்தது. மய்யத்தின் தலைவர் தேசநலனை முன்னிறுத்தும் தனது கருத்தை உரத்த குரலாக எழுப்பியிருக்கிறார்’ என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
