தமிழகத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நலம் 365-எனும் யூடியூப் சேனல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நலம் 365 எனும் யூடியுப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ எனும் யூடியுப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மரு.எழிலன் நாகநாதன், முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.உமா,  மருத்துவத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக் அளித்த பேட்டி: எந்தவித வணிக ரீதியான நோக்கங்களின்றி மக்களுக்கு தேவையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த விஷயங்களை கொண்டுபோய் சேர்ப்பதகாக நலம் 365 என்ற யூடியுப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. 2019ல் மருத்துவ துறைக்கு 2345 செவிலியர்களை எம்ஆர்பி மூலம் தேர்வு செய்வதற்கு விண்ணப்பித்தார்கள். அந்த 2345 செவிலியர்களை தேர்வு செய்ய முயற்சித்தபோது உடனடியாக பணியில் 2323 பேர் பணியில் சேர்ந்தனர். மீண்டும் 2020 ஏப்ரல் மாதத்தில் 5736 செவிலியர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கொரோனாவை காரணம் காட்டி, அப்போதைய மருத்துவத் துறை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் 2366 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பில் விதிமுறைகளுக்கு மாறாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணியில் நீடிக்க வைக்கக்கூடாது என்று கூறப்பட்டது. முதல்வரின் உத்தரவின் படி, விதிமுறைகளுக்கு மாறாக பணிநியமனம் செய்யப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ளும் போது நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுவரை அவர்கள் வாங்கி வந்த ரூ.14,000 மாத சம்பளமான ரூ.18,000மாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

பிஎ-5 லிருந்து உள் உருமாற்றம் அடைந்த பிஎப்-7 வைரஸ்தாக்கம் சீனா, தைவான், ஜப்பான் மற்றும் தென்கொரியாக ஆகிய நாடுகளில் அதிகமாகியுள்ளது. இந்த வகையில் சீனாவில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த 2 பேரு, கம்போடியா, துபாயிலிருந்து வந்தவர்கள் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 13 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் இருந்த வந்தவருக்கு பிஎ2 வகை வைரஸ், மஸ்கட்டிலிருந்த வந்தவருக்கு பிஎ-2, பாங்காக்கில் இருந்த வந்தவருக்கு பிஎ2(10.1), 6 பேருக்கு ஒமைக்ரானின் உருமாற்ற வைரஸ் பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் வைரஸ் பாதிப்புகளாகும். இந்த வகை வைரஸ் பாதிப்புகளில் உயிர் இழப்பு நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் 93 பேரின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 91 பேருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற 2 பேருக்கு டெல்டா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Related Stories: