சுவாமி மலையில் மறைத்து வைத்திருந்த சோழர் கால அம்மன் சிலை மீட்பு பதுக்கியவரிடம் விசாரணை

சென்னை: தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் ஒருவர் தனது வீட்டில், பல கோடி மதிப்புள்ள சோழர் காலத்தை சேர்ந்த 5 அடி உயரம் உள்ள சிவகாமி அம்மன் சிலையை மறைத்து வைத்துள்ளார் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், சாமிமலை யாதவ தெருவில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில்  சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 165 சென்டி மீட்டர் உயரமும், 45 சென்டி மீட்டர் அகலமும் உடைய பிரமாண்டமான சிவகாமி அம்மன் சிலை இருந்தது. பொதுவாக தமிழகத்தில் 5 அடி உயரம் உள்ள சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. அதேநேரம், சிலையை வீட்டில் மறைத்து வைத்திருந்த சரவணனிடம் சிலைக்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழுவினர் சிவகாமி அம்மன் சிலையை மீட்டனர். மேலும், சிலையை பதுக்கி வைத்திருந்த சரவணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த சிலையானது சோழர் காலத்தை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: