சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் கருவரை முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சுதபாத தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினார். அடுத்த மாதம் 5 ம் தேதி தேரோட்டமும் 6ம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். சிதம்பரம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: