விழுப்புரம்: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம் ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட முதல்வர் பாடுபட்டு வருகிறார்.
