உத்தரகாண்ட் ஆளுநர் ஒப்புதல் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்

டேராடூன்: உத்தரகாண்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு  மாநில ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையில்  பாஜ ஆட்சி நடந்து வருகிறது. மாநில அரசு கடந்த நவ. 30ம் தேதி கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்நிலையில்,சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு  ஆளுனர் லெப்டினன்ட் ஜெனரல்.

குர்மித் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தின்படி கட்டாய மதமாற்றம் செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆளுனர் ஒப்புதலை தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

Related Stories: