வைரஸ் பாதிப்பு எதிரொலி: சென்னை விமானநிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை..!!

சென்னை: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் நள்ளிரவு முதல் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நள்ளிரவில் இருந்து துவங்கவேண்டும் என மத்திய மற்றும் மாநிலஅரசுகள்  அறிவித்துள்ளது. அதனை அடுத்து சென்னை பன்னாட்டு விமானநிலைய  முனையத்தில் தமிழக சுகாதார துறை அமைப்பினர் வருகை பதிவு பகுதியில் கொரோனா பரிசோதனை முகாமை அமைத்துள்ளனர்.

அங்கு வரும் பயணிகளில் 100 பயணிகளில் 2 பயணிகளை ரேண்டம் முறையாக அவர்களை வரவழைத்து. சளி, காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற உபாதைகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடம் ஆர்டிபிசிஆர் எனப்படும் பரிசோதனை மேற்கொள்கிறார்கள். ஏர்வேஸ் நிறுவனம் பயணிகள் பயணித்துவரும்போது கண்டறிந்து அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் அவர்களை அழைத்து வந்து இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.  அவர்களின் விலாசம், தங்கியிருக்கும் இடம், செல்போன் எண் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு. அவர்களை சுகாதார துறை சோதனை செய்து தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பிவிடுகிறார்கள்.

நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில் சென்னை விமானநிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடத்தப்பட்டுவருகிறது.  பயணிகள் சமூக இடைவெளி விட்டும் முககவசங்கள் அணியவேண்டும் என்றும் பல்வேறு பலகைகளை அமைத்தும் சுகாதார துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் வந்து ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறைனர் தெரிவித்துள்ளனர்.  பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அது எந்த வகை கொரோனா என்றும் தற்போது உருமாறிய பி.எப் வகை கொரோனா அல்லது ஓமிக்ரான் வகையா என்று பகுப்பாய்வு செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: