யாத்திரைக்கு பதில் பொதுக்கூட்டம்: ராஜஸ்தான் பாஜ திடீர் பல்டி

ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு மாநில பாஜ சார்பில் ஜன ஆக்ரோஷ் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாஜ பொது செயலாளர் அருண் சிங் நேற்று முன்தினம் கூறுகையில்  ‘‘அரசியலை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதால் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது,’’ என  தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில பாஜ தலைவர் சதீஷ் பூனியா, ‘‘ யாத்திரை  ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: