மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாஜக பெண் எம்எல்ஏ முக்தா திலக், சிகிச்சை பலனின்றி இறந்தார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் பேத்தியும், புனே முன்னாள் மேயருமான முக்தா திலக் (57), மகாராஷ்ரா பாஜக எம்எல்ஏவாக இருந்தார். இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.