மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 மாணவிகள் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்..!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்காக ஏற்றிச் சென்ற இரண்டு பள்ளி பேருந்துகள் மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பிஷ்ணுபூர் - கௌபம் சாலையில் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பழைய கச்சார் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானது. இம்பாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள லாங்சாய் மலைப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 36 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 20 மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விபத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கோர விபத்து, தொடர்பாக  மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க எஸ்டிஆர்எஃப், மருத்துவக் குழு மற்றும் எம்எல்ஏக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: