கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறக்க திட்டமா?.. பேரவைக் கூட்டத்தில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்..!

பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று கூடும் சட்டப்பேரவையில் சாவர்க்கரின் உருவப்படம் திறக்க திட்டமிடப்பட்டதோடு ஹலால் செய்யப்பட்ட உணவை தடை செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலுக்கு முந்தைய இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மறுபுறத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி சட்டமன்றத்தை முற்றுகையிட விவசாய சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சூழலில் சட்டப்பேரவையில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் உருவப்படங்களுடன் ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவரான சாவர்க்கரின் படத்தையும் வைக்க பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவரான திப்பு சுல்தானின் உருவப்படத்துடன் சாவர்க்கரின் பேனரும் வைக்கப்பட்ட நிகழ்வு கடந்த சுதந்திர தின விழாவில் கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் அங்கு நடத்தப்பட்ட தடியடியை தொடர்ந்து 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது கர்நாடகா முழுவதும் ஹலால் செய்யப்பட்ட உணவை தடை செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: