புயலின் தாக்கம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: இரவு நேரத்தில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயலாக புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் தற்போது வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: