இடி, மின்னலின்போது மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்!: மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது செய்யக்கூடாதவை எவை?..பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..!!

சென்னை: மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்கவுள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் போது செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து பின்வருமாறு காணலாம்.

* தனியாக உள்ள மரங்கள், குடிசைகளில் தஞ்சம் அடையக்கூடாது.

* பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

* சேதமடைந்த கட்டிடங்கள், கூடாரங்களுக்கு அடியில் நிற்கக்கூடாது.

* நீர்நிலைகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருப்பது பாதுகாப்பானது.

* குழந்தைகள், செல்லப்பிராணிகளை தண்ணீருக்கு அருகில் விடக்கூடாது.

* இடி, மின்னலின்போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

* ஜன்னல்கள், கதவுகளுக்கு அருகில் நிற்பதை தவிர்க்கலாம். திடீரென ஏற்படும் மின்னலால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

* ஈரமான இடங்களில் நேரடியாக கைகளால் சுவிட்சுகளை தொடக்கூடாது.

* வீட்டு சுவர்களில் மின்கசிவு ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பது மின் கசிவு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

* மின் கம்பங்களில் கயிறு கட்டவோ, கால்நடைகளை கட்டவோ கூடாது.

* அறுந்து கிடக்கும் மின் வயர்களுக்கு அருகில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு அது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள இவை அனைத்தையும் மழை காலங்களில் முறையாக கடைபிடித்தால் ஆபத்துகளை பெருமளவு தவிர்க்க முடியும்.

Related Stories: