ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் தகவல்

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் புயல் உருவாகியுள்ளது. வாங்க கடலில் தீவிர புயலாக வலுவிழந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆம்னி பேருந்துகள் இன்று (நவ.9) இரவு வழக்கம் போல் இயங்கும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிவரும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்து இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றிலிருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே புயலின் தாக்கம் அதிகமக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு பேருந்துகள் எந்த மாவட்டத்திலும் இன்றிரவு நிறுத்தப்பட்டது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புயல் பாதிப்பு இருக்கும் இடங்களில் மட்டுமே அந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் அனைத்து வழித்தடங்களில் இயங்கும் என்றும் வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறியுள்ளனர்.

Related Stories: