வேளச்சேரி- மவுண்ட் பறக்கும் ரயில் பாதை இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தி.மு.க. எம்.பி. தமிழச்சி வலியுறுத்தல்

சென்னை: வேளச்சேரி - மவுண்ட் இடையே பறக்கும் ரயில் திட்டத்தில், எஞ்சியுள்ள அரை கி.மீ. தூரத்துக்கு பாதை அமைக்கும் பணிகளை முடித்து, ரயில் சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. தமிழச்சி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு வலிவுறுத்தியுள்ளார். பறக்கும் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் தென்சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வாகனப்போக்குவரத்து மூலம் வெளியாகும் கரியமில வாயு பாதிப்பையும் குறைக்க உதவிகரமாக இருக்கும். திட்டத்தை விரைந்து முடிப்பதன் மூலம் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் மிகுந்த வெற்றிகரமாக அமையும்.

Related Stories: