மின்னணு நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்து சென்னை வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்னணு நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்த ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு வரும் அடுத்த ஆண்டு மார்ச் 23-25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட விரும்புகிறது.  யூமாஜின் சென்னை ‘23 இந்த குறிக்கோளை அடையும்  முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். கொள்கை வகுப்பாளர்கள், தலைமை அனுபவ அதிகாரிகள், முன்னணி தொடக்கத் தொழில்முனைவோர், தொழில்நுட்ப வல்லுநர்கள், திறன் மேம்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி விவாதித்து தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான எதிர்கால பாதைகளை யூமாஜின் பரிந்துரைக்கும்.

இந்த மாநாடு 250 க்கும் மேற்பட்ட  முன்னோடிகள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஒன்று கூட வாய்ப்பு அளிக்கும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய குறிப்புகள், முதலீட்டு களம்,  குழு விவாதங்கள், ஆர்வமூட்டும் விவாதங்கள்,  தயாரிப்பு காட்சிகள், தொழில்நுட்ப  காட்சிகள் மற்றும் சிறந்த ஆளுமையாளர்களின் சிந்தனை அறிக்கைகள் வெளியீடு ஆகியவை இடம்பெறும். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக புகழ்பெற்ற “புளூ ஓஷன் விருதுகளை” இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது.

லிஸ் டால்போட் பாரே, பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் கான்சுல் ஜெனரல், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நீரஜ் மித்தல், தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் முறைப்படி யூமாஜின் சென்னை மாநாட்டின் பங்குதாரர் நாடாக பிரான்ஸ் நாட்டை அறிவித்து ப்ளூ ஓஷன் விருதுகளின் இந்திய பதிப்பை இன்று துவக்கி வைக்கின்றனர். ப்ளூ ஓஷன் விருதுகள் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதாக நீரஜ் மித்தல் அறிவித்தார்.

ஆழ்தொழில்நுட்ப தொழில்முனைவோர் தங்கள் யோசனைகளை உலகளவில் எடுத்துச் செல்ல இவ்விருதுகள் தொடக்கக் களமாக இருக்கும். ப்ளூ ஓஷன் விருதுகள் பிட்ச்சிங் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும். இவ்விருதுகள் சர்வதேச நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு மூன்று பிரிவுகளில் வழங்கப்படும். இவ்விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான இறுதிநாள் வரும் ஜனவரி 31 ஆகும். மேலும் 3 நாட்கள் நடைபெறும் யூமாஜின் சென்னை 23 சிறப்பம்சங்களான 7 தடங்கள், 100 அமர்வுகள், 150 கண்காட்சியாளர்கள், 250 பேச்சாளர்கள், 10 கே பிரதிநிதிகள் பசுமை போக்குவரத்து, டிஜிட்டல் எதிர்காலம், அக்ரிநெக்ஸ்ட், காலநிலை, மாற்றம் மற்றும் நிலைத் தன்மை, சுகாதாரம்- வாழ்க்கை அறிவியல், புதிய எல்லைகள் மற்றும் நன்மைக்கான தொழில்நுட்பம் ஆகிய ஏழு பகுதிகளில் கவனம் செலுத்தி செயற்கை நுண்ணறிவு இயந்திர வழி கற்றல், தரவு அறிவியல், வெப்3, இணைய பாதுகாப்பு, ஆகுமெண்டட் ரியாலிட்டி, வெர்சுவல் ரியாலிட்டி, மற்றும் அட்வான்ஸ் கனெக்டிவிட்டியான 5ஜி, 6ஜி போன்ற தொழில் நுட்பங்களை காட்சிபடுத்தும். யூமாஜின் சென்னை ’23 பற்றிய கூடுதல் தகவலுக்கு https://umaginechennai.com என்ற இணையதளத்தை பார்வையிடவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: