ஓவிய, சிற்ப துறையில் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு பரிசு தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஓவிய, சிற்ப கலை துறையில் சிறந்து விளக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் 10 கலையாசிரியர்களுக்கு தலா ₹10,000 வீதமும், ஓவியம், சிற்ப கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ₹10,000 வீதமும் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஓவியக்கலை மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களிடம் இருந்தும்,  ஓவிய, சிற்ப கலைப்பிரிவில் நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன.

அதன்படி ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் மற்றும் ஓவியம் மற்றும் சிற்ப கலைப்பிரிவில் கலை நூல்கள் பதிப்பித்துள்ள நூலாசிரியர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் தன்விவர குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வி தகுதிகள், அனுபவம்,  இதுவரை பெற்ற விருதுகள், பதிப்பித்த நூல், சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களுடன்) கூடிய விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.கலை பண்பாட்டுத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-600 002, தொலைபேசி எண்: 28193195, 28192152 எனற முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: