கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி: ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

சென்னை: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடலில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.

Related Stories: