திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா: ராஜபாளையம் மாணவர்கள் அசத்தல்

ராஜபாளையம்: திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்து ராஜபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதி வேண்டி உடலில் தீபங்களை ஏற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

இதில், ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையத்தை சேர்ந்த மாணவர்கள் நரேஷ், ராகவ், இசக்கிமுத்துபாண்டி, சஞ்சனா ஆகி நான்கு பேரும் தீபத் திருநாளாம் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 50 தீபங்களை உடலில் ஏந்தியவாறு பத்ம விரிஜ்சியாசனம், பூர்ணசுத்த வஜ்ராசனம், நாராயணா ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் நீராத்திலிங்கம் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: