திருவாரூாில் ஆதரவற்றோர் 25 பேர் காப்பகத்தில் ஓப்படைப்பு

திருவாரூர்: தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆப்பரேசன் புதுவாழ்வு என்ற பெயரில் ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையம், கோயில், சாலையோரம் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்துகொண்டிருக்கும் நபர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து பாராமரிப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் நகரம், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 25 பேர் போலீசார் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் மறுவாழ்விற்காக சேர்க்கப்பட்டனர்.

Related Stories: