திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் இட்டனர். 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரத்தை கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.

Related Stories: